மக்கள் குடி பெயர்தலுக்கான காரணங்கள்
குடி பெயர்தலுக்கான காரணங்கள்:
குடிபெயர்தலுக்கான காரணிகளை உந்துக் காரணி
(push factor) மற்றும் இழுவைக் காரணி(Pull factor) என
இருவகைப்படுத்தலாம். கட்டாயமாக மக்களைக் குடிபெயர செய்வது அல்லது மக்களை தன்பால்
ஈர்ப்பது ஆகிய இரண்டும் முறையே உந்துக் காரணி மற்றும் இழுவைக் காரணி எனப்படும். உந்துக் காரணி என்பது கட்டாயக் காரணியாகும்.
இது ஒருவர் எந்த நாட்டிலிருந்து வெளியேறுகிறாரோ அந்நாட்டோடு தொடர்புடையது. இழுவைக் காரணி
என்பது ஒருவர் எந்த நாட்டிற்கு இடம்பெயர்கிறாரோ
அந்நாட்டோடு தொடர்புடையது.
பொதுவாக ஓரிடத்தின் சாதகமான சூழ்நிலையே மக்களை அவ்விடத்திற்கு ஈர்க்கிறது.
பொதுவாக உந்து மற்றும்
இழுவைக் காரணிகள் ஒரு
காந்தத்தின் வடமுனை மற்றும்
தென் முனைப்போல
கருதப்படுகின்றன.
உந்தும் காரணிகள் :
போதிய
அளவு வேலையில்லாமை,
குறைவான
வாய்ப்புகள்,பாலைவனமாக்கல், பஞ்சம்/வறட்சி, அரசியல்
அச்சுறுத்தல், அடக்கு முறை, குறைந்த மருத்துவ
வசதி, செல்வ இழப்பு, இயற்கை சீற்றங்கள், மரண அச்சுறுத்தல்கள், அடிமைத்தனம், மாசடைதல்,
வீட்டுவசதிக் குறைவு, நில உரிமையாளர்கள் கொடுமைப்படுத்துவது,கோரிக்கைக்களை நிறைவேற்ற தேவையான வாய்ப்புகள் குறைவு.
இழுக்கும் காரணிகள்:
வேலைவாய்ப்புகள்,
சிறந்த வாழ்க்கை நிலை, அரசியல் மற்றும் மதசுதந்திரம், பொழுதுபோக்கு, கல்வி, போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு, குடும்ப பிணைப்புகள், தொழிற்சாலை, கோரிக்கைகளை நிறைவேற்ற
தேவையான வாய்ப்புகள்.
Comments
Post a Comment